கோலாலம்பூர், மே.23-
பிகேஆர் கட்சியின் தேர்தலுடன் கூடிய தேசிய பேராளர் மாநாடு இன்று தொடங்கியுள்ள வேளையில் தனது துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிடும் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தனது அலுவலகத்தைக் காலி செய்து விட்டதாகக் கூறப்படுவதை அமைச்சின் முன்னாள் அதிகாரி மறுத்துள்ளார்.
பொருளாதார அமைச்சு சார்பில் ஹரிராயா பொது உபசரிப்பு நடத்தப்படுவதற்காக ரஃபிஸி ரம்லி, அலுவலகம் சுத்தம் செய்யப்படுகிறதே தவிர, அவர் தனது அலுவலகத்தைக் காலி செய்யவில்லை என்று முன்னாள் அதிகாரியான நஜிப் பாகார் குறிப்பிட்டார்.
பிகேஆர் உயர்மட்டத் தலைவர்களுக்கானத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் வேளையில் கட்சியின் உதவித் தலைவரும், பிகேஆர் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மகள் நூருல் இஸாவிடம் தோல்வி காணும் நிலை ஏற்படுமானால், பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன் என்று ரஃபிஸி ரம்லி அறிவித்துள்ளார்.