பணி ஓய்வு பெறும் வயது வரம்பை 65 ஆக உயர்த்துவது ஆராயப்படுகிறது

கோலாலம்பூர், மே.23-

கட்டாயப் பணி ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 65 ஆக உயர்த்தும் உத்தேசத் பரிந்துரைத் திட்டத்தை மனித வள அமைச்சு தற்போது ஆராய்ந்து வருவதாக அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்துள்ளார்.

இந்த உத்தேசப் பரிந்தரையை, மனித வள அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளரான கொள்கை மற்றும் அனைத்துலக விவகாரங்களைக் கவனிக்கும் முகமட் ஷாஹாரின் உமார் தலைமையிலான சிறப்புக் குழு ஒன்று தற்போது ஆராய்ந்து வருவதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

கட்டாயப் பணி ஓய்வு பெறும் வயது என்பது மனித வள அமைச்சின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு இருப்பதால் இந்த விவகாரத்தை தனது அமைச்சு ஆராயும் என்று ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

மக்களின் நலன் சார்ந்த அம்சங்களை, அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்ப ஆராயப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வில் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிமார்களின் கருத்துகளும் கருத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் உறுதி அளித்தார்.

WATCH OUR LATEST NEWS