மலாக்கா, மே.23-
பல்கலைக்கழக மாணவி ஒருவரை மானபங்கம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் பாகிஸ்தான் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மலாக்கா, ஜாலான் ஆயர் குரோ லாமாவில் கடந்த திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில், 21 வயது மாணவி, பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு இஸோரா உணவு வளாகத்தின் படிக்கட்டைப் பயன்படுத்திய போது எதிரே வந்த அந்த பாகிஸ்தானிய ஆடவர், அந்த மாணவியைக் கட்டியணைத்து, முத்தமிட்டதாகக் கூறப்படுகிறது என்று மலாக்கா தெஙா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.
அந்த பாகிஸ்தான் ஆடவரின் உடும்புப் பிடியில் சிக்கி, தப்பிக்க முயற்சி செய்த போது, அவரின் கைமுட்டியில் காயம் ஏற்பட்டதாக கிரிஸ்டப்பர் பாதிட் குறிப்பிட்டார்.