சண்டாகான், மே.23-
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு கோடியே 13 லட்சம் ரிங்கிட் கடனை அங்கீகரிப்பதில் மிகப் பெரிய அளவில் லஞ்சம் பெற்றதாக வங்கிகளின் முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக நடத்தப்படும் தேடுதல் வேட்டையில் மேலும் இரண்டு முன்னாள் வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சபா, சண்டாகானில் நடந்ததாகக் கூறப்படும் இந்த மிகப் பெரிய ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நேரடியாக களம் இறங்கி விசாரணை செய்து வரும் வேளையில் மேலும் இரண்டு முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த இருவரையும் வரும் மே 29 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான நீதின்ற அனுமதியை எஸ்பிஆர்எம் இன்று பெற்றுள்ளது. இதனிடைய இருவர் கைது செய்யப்பட்டதை சபா மாநில எஸ்பிஆர்எம் இயக்குநர் எஸ். கருணாநிதி உறுதிப்படுத்தியுள்ளார்.