பிந்துலு, மே.23-
செம்பனைக் குலைகளை ஏற்றி வந்த லோரி ஒன்று, தடம் புரண்டதில் லோரி தீப்பிடித்துக் கொண்டு, அதன் ஓட்டுநர் கருகி மாண்டார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 9.50 மணியளவில் சரவாக், பிந்துலு, ஜாலான் கிடுரோங்கில் நிகழ்ந்தது.
குடை சாய்ந்த லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட 59 வயதுடைய லோரி ஓட்டுர், தப்பிக்க இயலாமல் கருகி மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.