அதிகாரத் துஷ்பிரயோகம்: முன்னாள் செயலாளர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலாம், மே.23-

2 லட்சம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான பெஃல்டா மடானி திட்டத்தை வலுப்படுத்தும் நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியான 2 லட்சம் ரிங்கிட்டைத் தவறாகப் பயன்படுத்தியதாக பிரதமர் துறையின் பெஃல்டா மேற்பார்வைப் பிரிவின் முன்னாள் செயலாளர் ஒருவர், இன்று ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

54 வயது டத்தோ அஸ்லான் ஜோஹார் என்ற அந்த முன்னாள் செயலாளர், நீதிபதி அவாங் கெரிஸ்னாடா அவாங் மாஹ்மூட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி பண்டார் பாரு பாங்கி செக்‌ஷன் 9 இல் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 5 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 403 பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

தனக்கு எதிரானக் குற்றச்சாட்டை மறுத்து, டத்தோ அஸ்லான் ஜோஹார் விசாரணை கோரியதால், அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 25 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

WATCH OUR LATEST NEWS