கோலாலம்பூர், மே.23-
மலாய்க்காரர்களை அடிப்படையாகக் கொண்ட பெரிக்காத்தான் நேஷனல் கட்சி, நாட்டில் உள்ள மலாய்க்காரர்களை ஒன்றுப்படுத்தத் தவறிவிட்டதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
மலாய்க்காரர்களை ஒன்றுப்படுத்துவதற்கு மலாய்க்கார அரசியல் கட்சிகள் ஒன்று கூட, போதுமான ஆற்றலையும், வலிமையையும் கொண்டிருக்கவில்லை என்று நாட்டிற்கு இரண்டு முறை பிரதமராகப் பொறுப்பேற்ற துன் மகாதீர் குறிப்பிட்டார்.
மலாய்க்கார அரசியல் கட்சிகள், இந்த நாட்டில் உள்ள மலாய்க்காரர்களை ஒன்றுப்படுத்துவதை விட அந்தந்த கட்சிகள் தங்களுக்கு என்று சொந்த நலன் சார்ந்த திட்டங்களைக் கொண்டுள்ளன என்று துன் மகாதீர் குற்றஞ்சாட்டினார்.