ஜோகூர் பாரு, மே.23-
பிகேஆர் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் தோல்விக் கண்ட ரஃபிஸி ரம்லி, இன்றிரவு தொடங்கிய கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.
தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் மாநாட்டின் பிரதான மேடையில் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அருகில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நாற்காலியில் ரஃபிஸி ரம்லி அமர்ந்திருந்தார்.
முன்னதாக, ரஃபிஸி ரம்லி மாநாட்டு மண்டபத்திற்கு நுழைந்த போது, பேராளர்கள் பலர் ரெபோர்மாசி என்று முழக்கமிட்டு, கட்சியின் துணைத் தலைவரை வரவேற்றனர்.
உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலுடன் கூடிய மாநாடு, ஜோகூர், பெர்சாடா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.