விபத்தில் இரண்டு சீனப் பிரஜைகள் உயிரிழந்தனர்

குவாந்தான், மே.24-

கிழக்குக்கரை நெடுஞ்சாலையான லெபுராயா பந்தாய் தீமோரில் 234.7 ஆவது கிலோமீட்டரில் குவாந்தானுக்கு அருகில் நிகழ்ந்த கோரச் சாலை விபத்தில் சீன நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். மேலும் அறுவர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 2 மணியளவில் நிகழ்ந்தது. இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இவ்விபத்தில் இரண்டு சீனப் பிரஜைகளும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஸாஹாரி வான் பூசு தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS