தனிப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்பத் தயார்

கோலாலம்பூர், மே.24-

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் தேர்தலில் நூருல் இஸாவிடம் தோல்வி கண்ட ரஃபிஸி ரம்லி, இத்தோல்விக்குப் பிறகு தனிப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்பத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் பிகேஆர் மாநாட்டில் ரஃபிஸி ரம்லி கலந்து கொள்ளவில்லை. அவர் ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூருக்குத் திரும்பி விட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும் தேர்தல் முடிவுகள் குறித்து தாம் இனி அதிகமாகப் பேசப் போவதில்லை என்று முன்னதாக மாநாட்டு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஃபிஸி ரம்லி மேற்கண்டவாறு கூறினார்.

கட்சியின் துணைத் தலைவராகப் பெரும் அதிகாரத்தில் இருந்த தம்மைத் தோற்கடித்தற்காக பேராளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், முக்கியப் பதவிலிருந்து விடுபட்டது மூலம் தற்போது நிம்மதி பெருமூச்சு விட முடிகிறது என்று ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS