ஷா ஆலாம், மே.24-
ஷா ஆலாம், டேசா மோச்சிஸ் என்ற இடத்தில் கூண்டில் அடைக்கப்பட்ட குரங்கு ஒன்றுக்கு ஸ்பிரே மூலம் சாயம் அடித்து, அலங்கோலப்படுத்திய நபரை பெர்ஹிலிதான் எனப்படும் வனவிலங்கு, தேசிய பூங்காக்கள் துறை உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று விலங்கு பாதுகாப்பு உரிமைச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் அராஜகச் செயலினால் அந்த குரங்கு துடிப்பதை, ஒரு காணொளி மூலம் சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிந்ததாக அந்தச் சங்கம் கூறுகிறது.
தனது சொந்த விருப்பத்திற்காக விலங்கினத்தை வதைக்கும் அந்த நபருக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.