அன்வார், நூருல் இஸாவிற்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் தந்தை ஆவார்: சைஃபுடின் கூறுகிறார்

ஜோகூர் பாரு, மே. 24-

நாட்டின் பிரதமரும், பிகேஆர் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நூருல் இஸாவிற்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் தந்தை ஆவார் என்று பிகேஆர் முன்னாள் பொதுச் செயலாளரும், உள்துறை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.

பிகேஆர் துணைத் தலைவர் தேர்தலில் ரஃபிஸி ரம்லியைத் தோற்கடித்து, கட்சியின் புதிய துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நூருல் இஸாவின் வெற்றியைத் தொடர்ந்து தேர்தல் முடிவு குறித்து தாம் கேள்வி எழுப்ப விரும்பவில்லை என்று சைஃபுடின் கூறினார்.

டத்தோஸ்ரீ அன்வாரின் வயது, அவர் கொண்டுள்ள பரந்த அனுபவம், அர்ப்பணிப்பு முதலியவற்றினால், அவரைக் கட்சி உறுப்பினர்கள் மிகவும் நேசிக்கின்றனர் என்று ஜோகூர் பாருவில் நடைபெறும் பிகேஆர் தேசிய பேராளர் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று உரையாற்றுகையில் சைஃபுடின் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS