கிள்ளானில் வியாழன் வரை கடல் பெருக்கு

கிள்ளான், மே.24-

கிள்ளான் வட்டாரத்தில் இன்று தொடங்கி வரும் மே 29 ஆம் தேதி வியாழக்கிழமை வரை கடல் பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல் பெருக்கு குறித்து விழிப்புடனும் தயார் நிலையிலும் இருக்குமாறு கிள்ளானில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர் பெருக்கு கடல் மட்டத்திலிருந்து 5.2 மீட்டர் உயரத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

இந்தக் கடல் பெருக்கு காரணமாக குறிப்பாக வெள்ள அபாயம் மிகுந்த மற்றும் போதுமான வடிகால் அமைப்புகள் இல்லாத இடங்களிலும் கடல் நீர் நிரம்பி வழிதல் மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக அது எச்சரித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS