கோலாலம்பூர், மே.24-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்குத் தங்கள் பயணப் பெட்டியில் 300 க்கும் மேற்பட்ட ஊர்வனங்களைக் கடத்துவதற்கு முயற்சித்த இரண்டு மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட பயணப் பெட்டிகளுக்குள், ஊர்வனங்கள் இருப்பது தங்களுக்குத் தெரியாது என்றும், மலேசியாவில் உள்ள நண்பர் ஒருவர் இந்தப் பயணப் பெட்டிகளை இந்தியாவில் உள்ள தனது அண்ணனிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் அவ்விருவரும் கூறிக் கொண்டனர்.
இந்த இரு நபர்களும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு முன்னதாக, விசாரணை அறிக்கைக்காகத் தாங்கள் காத்திருப்பதாக வனவிலங்கு, தேசியப் பூங்கா தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காடீர் அபு ஹாஷிம் தெரிவித்தார்.