முதலாளியால் தாக்கப்பட்ட பெண், போலீசில் புகார்

ஈப்போ, மே.24-

தனது முதலாளி, தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதாக ஈப்போவைச் சேர்ந்த 24 வயது பெண் போலீசில் புகார் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்ணை, முதலாளி தாக்கும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண், தனது முதலாளிக்கு எதிராக கடந்த மே 22 ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 2.10 மணியளவில் போலீசில் புகார் செய்து இருப்பதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் ஈப்போ, தாமான் ரிஷாவில் நடந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பெண், வேலையில் இருந்த போது முதலாளியால் தாக்கப்பட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS