எஸ்பிஎம் தேர்வில் 10 ஏ பெற்றவர்களுக்கு உபகாரச் சம்பளம்

குவாந்தான், மே.24-

2024 ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வில் 10 ஏ பெற்றவர்கள், தங்களின் உயர்க்கல்வியை கோலாலம்பூர் பல்கலைக்கழகமான யுனிகேஎல் மற்றும் போலி-தெக் மாரா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்வதற்கு முழு உபகாரச் சம்பளம் வழங்கப்படும் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.

எஸ்பிஎம் தேர்வில் சிறந்த அடைவு நிலையைப் பெற்ற மாணவர்கள், குடும்ப வறுமையைக் காரணம் காட்டி, உயர்க்கல்வியை மேற்கொள்ளாமல் இருப்பதைத் தடுக்கும் வகையிலும், அவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கும் முழு உபகாரச் சம்பளம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS