இமயத்தின் நட்புறவான நடைப் பயணம் 2025

புத்ராஜெயா, மே.24-

புத்ராஜெயாவில் பொதுச் சேவைத் துறையில் பணியாற்றி வரும் இந்தியப் பணியாளர்களின் அமைப்பான இமயத்தின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர நட்புறவான நடைப் பயணம் சனிக்கிழமை காலையில் மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

அழகிய சைபர் ஜெயா, ஏரிப் பூங்காவில் மிகுந்த கவன ஈர்ப்புடன் நடைபெற்ற இந்த நடைப் பயணத்தில் 70 பங்கேற்பாளர்கள் பங்கு கொண்டனர்.

இமயம் உறுப்பினர்களிடையே உடல் ஆரோக்கியம் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடைப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

காலைப் பொழுதில் உற்சாகமிக்க சூழலில் நடைபெற்ற இந்த நடைப் பயணத்தில், சிறப்பு விருந்தினராக மலேசிய நடிகர் பேபி கோபா என்று அன்பாக அழைக்கப்படும் குபேன் மகாதேவன் கலந்து கொண்டது, இந்த நடைப் பயணத்திற்கு மேலும் மெருகேற்றியது.

சுமார் 3 கிலோ மீட்டர் நடைப் பயணத்தில் பங்கேற்பாளர்களுடன் இணைந்து பேபி கோபாவும் நடந்து வந்தது, மிகுந்த கலகலப்பை ஏற்படுத்தியது.

இந்த மெஸ்ரா நடைப் பயணம் 2025 இல் நான்கு ஊடாடும் விளையாட்டு நிலையங்கள், ஈர்க்கத்தக்க அதிர்ஷ்டக் குலுக்கல் மற்றும் இலவச அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவை பங்கேற்பாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.

Klinik Morraz Medicare ஆதரவுடன் இலவச மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட இந்த நடைப் பயண நிகழ்வை, வேடிக்கை மற்றும் உற்சாகம் நிறைந்ததாக மாற்றியது.

இமயத்தின் தலைவர் தலைவர் டாக்டர் சதீஸ்குமார் கே முத்துசாமி, கூறுகையில் மெஸ்ரா நடைப் பயணம் என்பது உடற்பயிற்சியை மட்டும் நோக்கமாகக் கொண்டது அல்ல. மாறாக, அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கிடையே பிணைப்புகளை வலுப்படுத்துவதும் நோக்கத்தையும் உள்ளடக்கியது என்றார்.

WATCH OUR LATEST NEWS