கோலாலம்பூர், மே.24-
வியட்நாம் பிரதமர் Pham Minh Chinh, இன்று மே 24 ஆம் தேதி தொடங்கி, 28 ஆம் தேதி வரை மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள வருகையானது, ஆசியானுடனான இரு வழி உறவை வலுப்படுத்தும் என்று மலேசியாவிற்கான வியட்நாம் தூதர் Dinh Ngoc Linh தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் மலேசியாவுடன் விரிவான கூட்டு பங்காளித்துவத்தை ஏற்படுத்திக் கொள்வது முதலியன வியட்நாமின் வெளி விவகாரக் கொள்கைக்கு ஏற்ப வியட்நாம் பிரதமரின் இந்த வருகை அமைந்துள்ளதாக Dinh Ngoc Linh குறிப்பிட்டார்.