கோலாலம்பூர், மே.24-
மலாய்க்காரர்களின் இறையாண்மைப் பேரணி என்ற பெயரில் இன்று பிற்பகலில் கோலாலம்பூரில் பேரணி ஒன்று நடைபெற்றது.
மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் நலன் சார்ந்த அம்சங்களை முன்நிறுத்தி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் பேரணியில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
நகர்புற மறு மேம்பாடு தொடர்பாக அரசாங்கம் வடிவமைத்து வரும் உத்தேசச் சட்டத் திருத்த மசோதாவை மலாய்க்காரர்களும், இஸ்லாமியர்களும் எதிர்ப்பதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.