கோலாலம்பூர், மே.25-
கிழக்குத் திமோர் ஆசியானின் அங்கத்துவம் பெற அதன் சட்ட வரையறையை இன்று ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது, கிழக்குத் திமோர் ஆசியானில் முழு உறுப்பினராக ஆவதற்கு வழி வகுக்கிறது. வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கிழக்குத் திமோர் ஒரு நிரந்தர உறுப்பினராக ஆசியானில் இணையும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹாசான் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.