கோலாலம்பூர், மே.25-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அடுத்தத் தலைவர் அதன் மூத்த அதிகாரிகளில் ஒருவராக இருக்க வேண்டும் என்று மலேசிய ஊழல் கண்காணிப்பு அமைப்பான எம்சிடபள்யுவின் தலைவர் ஜாயிஸ் அப்துல் காரிம் வலியுறுத்தியுள்ளார். இது, ஆணையத்தின் கொள்கைகள், செயல்பாடுகள், நிர்வாகம் திறம்படத் தொடர்வதை உறுதிச் செய்யும். வெளிநபர்கள் நியமிக்கப்பட்டால் ஆணையத்தின் சிக்கலான அமைப்பு முறையையும் பொறுப்புகளையும் புரிந்து கொள்ள அதிக நேரம் எடுக்கும் என்று அவர் கூறினார். தற்போதைய தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியின் பரந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளும் திறன் கொண்ட ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஜாயிஸ் குறிப்பிட்டார்.