சிறப்பாகச் செயல்படாத ஊராட்சி மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

செர்டாங், மே.25-

‘போக்குவரத்து சமிக்ஞை விளக்கு’ மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் சிறப்பாகச் செயல்படாத ஊராட்சி மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்றங்கள், வீட்டு வசதி அமைச்சர், ங்கா கோர் மிங் எச்சரித்துள்ளார். இப்புதிய மதிப்பீட்டு முறை இந்த மாதத் தொடக்கத்தில் அமல்படுத்தப்பட்டது.

சிவப்பு நிறத்தில் குறிக்கப்படும் ஊராட்சி மன்றங்களின் நிதி ஒதுக்கீடு இரத்து செய்யப்படும் என்றும், மஞ்சள் நிறத்தில் குறிக்கப்படுபவர்களின் நிதி குறைக்கப்படும் என்றும், ஆனால் பச்சை நிறத்தில் குறிக்கப்படுபவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிவப்பு நிறமாகக் குறிக்கப்படும் ஊராட்சி மன்றங்களின் தலைவர்களும் செயலாளர்களும் ஆலோசனைக்காகவும் மேம்பாட்டுப் பயிற்சிக்காகவும் அழைக்கப்படுவார்கள். இது ஊராட்சி மன்றங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதையும், பொதுமக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS