கோலாலம்பூர், மே.25-
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நண்பர்களையும் அமைச்சர்களையும் பாதுகாக்க, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை கவசமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அரசாங்கத்திற்கு மூடா கட்சியின் இடைக்காலத் தலைவர் அமீரா அயிஷா அப்துல் அஸிஸ் வலியுறுத்தியுள்ளார்.
எந்த ஓர் அரசாங்கமும் ஆணையத்தை அரசியல் ஆயுதமாகவோ அல்லது கவசமாகவோ பயன்படுத்த உரிமை இல்லை என்று அவர் கூறினார். “இந்த ஆணையம் ஒரு சிலரின் நண்பர்களுக்கும் அமைச்சர்களுக்கும் புகலிடமாக மாறக்கூடாது” என்று அவர் நேற்று மெர்டேகா சதுக்கத்தில் நடைபெற்ற ‘உண்டூர் பாக்கி’ பேரணியில் தெரிவித்தார். இந்தப் பேரணியில், எஸ்பிஆர்எம் பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அதே சமயம், தியோ பேங் ஹோக் வழக்கு குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்பது உட்பட ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.