கோலாலம்பூர், மே.25-
நாட்டின் உணவு பாதுகாப்பை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவிலும் நவீன தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்தி வருகிறது விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சு. உள்நாட்டு உணவு பாதுகாப்பு மேம்படுவதன் மூலம், எதிர்காலத்தில் உள்நாட்டுப் பழங்களை ஆசியான் மட்டுமின்றி, பிறச் சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும். இறக்குமதியைச் சார்ந்து இருப்பதைக் குறைப்பதற்கும், காலநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கும் இந்த நடவடிக்கை அவசியம் என்று உணவு, வேளாண்மை அடிப்படைத் தொழில்கள் பிரிவுச் செயலாளர், அஸ்வா அஃபெண்டி பக்தியார் தெரிவித்தார்.
உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும், வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் விவசாயத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.