மலேசிய இளைஞர் மன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

கோலாலம்பூர், மே.25-

பணி ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு மலேசிய இளைஞர் மன்றம் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நாட்டின் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் வளர்ச்சியையும் எதிர்மறையாகப் பாதிக்கும். சமூகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அதன் தலைவர் முகமட் இஸ்ஸாட் அஃபிஃபி அப்துல் ஹாமிட் தெரிவித்துள்ளார்.

பணி ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது, தொழிலாளர் சந்தையில் பணியாளர் மாற்று விகிதத்தை நேரடியாகக் குறைத்து, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளைக் குறைக்கும் என்றும் அவர் கூறினார். எடுத்துக்காட்டாக, 2013 இல் ஓய்வு பெறும் வயது 55 இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்ட போது, சுமார் ஒரு மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளைப் பட்டதாரிகளும் இளம் வேலை தேடுபவர்களும் இழந்ததை முகமட் இஸ்ஸாட் சுட்டிக் காட்டி இவ்வாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS