ஜோகூர் பாரு, மே.25-
ஜோகூர் மாநில இளைஞர்களுக்கான வயது வரம்பை 16 ஆகக் குறைக்க உத்தேசித்துள்ளது. இதன் மூலம் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, இளம் பருவத்தினர் சமுதாய வாழ்க்கைக்கு முன்கூட்டியே தயாராக முடியும். இதன் மூலம், இளையோர் பொது அமைப்புகளில் இணைந்து வலுவான அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்க முடியும் என்று ஜோகூர் மாநில இளைஞர், விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் ஹைரி மாட் ஷா தெரிவித்தார். 16 வயதிலேயே இயக்க மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், பள்ளிப் படிப்பை முடித்த பிறகு சங்கங்களின் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவர்களுக்கு எளிதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.