கோலாலம்பூர், மே.25-
இந்த ஆண்டு ஆசியான்-அமெரிக்க உச்சநிலை மாநாட்டை நடத்துமாறு அமெரிக்காவிற்குக் கடிதம் எழுதியுள்ளார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம். மலேசியா இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிடமிருந்து பதிலுக்காகக் காத்திருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹாசான் தெரிவித்துள்ளார். இந்தச் சிறப்பு உச்சநிலை மாநாட்டை இந்த ஆண்டே நடத்த முடியும் என்று மலேசியா நம்புகிறது. இந்தப் பேச்சு வார்த்தைகள் மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவக் காலத்தின் முக்கியப் பகுதியாகும் என இன்று நடந்த ஆசியான் மாநாடு சார்ந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் முகமட் ஹாசான் குறிப்பிட்டார்.