பெட்டாலிங் ஜெயா, ஜூன்.06-
பாஸ் கட்சித் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங், தலைவர் பதவியிலிருந்து விலகக்கூடும் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.
உடல் நலப் பிரச்னையை எதிர்நோக்கியுள்ள மாராங் எம்.பி.யான 77 வயது ஹாடி அவாங், திரெங்கானுவில் நடைபெற்ற கட்சியின் தலைமைத்துவக் கூட்டத்தில் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.