டான்ஸ்ரீ வீட்டின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஜூன்.11-

கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை நிர்மாணிப்புக்கான கடன் உத்தரவாத நிதியில் மோசடி புரிந்திருப்பதாக தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆளாகியுள்ள டான்ஸ்ரீ ஒருவரின் வீடு, இன்று காலை 8 மணி முதல் உதவி போலீஸ்காரர்களைக் கொண்டு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள அந்த டான்ஸ்ரீயிடம் எஸ்பிஆர்எம், இன்று விசாரணை செய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உதவி போலீஸ்காரர்களைக் கொண்டு அந்த டான்ஸ்ரீ வீட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த டான்ஸ்ரீ இன்று காலையில் புத்ராஜெயாவிற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்வதாக இருந்தது. எனினும் அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பியிருப்பதால் அவரின் இல்லத்தில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு எஸ்பிஆர்எம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை நிர்மாணிப்புக்கான 143 மில்லியன் ரிங்கிட் முடக்கப்பட்டிருப்பதாக இதற்கு முன் எஸ்பிஆர்எம் அறிவித்து இருந்தது.

WATCH OUR LATEST NEWS