பெந்தோங், ஜூன்.11-
அண்மையில் கெந்திங் ஹைலென்ஸில் சிறுவன் ஒருவன் கடத்தப்படும் முயற்சி நடந்ததாகக் கூறப்படுவது தொடர்பில் போலீசார், எந்தவொரு புகாரையும் பெறவில்லை என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹான் முகமட் காஹார் தெரிவித்தார்.
எனினும் இதில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தனிநபர், இது குறித்து போலீசில் புகார் செய்வாரேயானால், விசாரணை அறிக்கையைத் திறப்பதற்கு போலீசார் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜுன் 9 ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு காணொளியில் அந்த சுற்றுலாத் தலத்தில் சிறுவன் ஒருவனைல் கடத்தும் முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று வரையில் குற்றப்பதிவுகளைச் சோதனையிடப்பட்டதில் இந்த கடத்தல் முயற்சி தொடர்பாக போலீசார் எந்தப் புகாரையும் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஸைஹான் விளக்கினார்.