இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் ஈரானில் 2 நிலநடுக்கங்கள்!

தெஹ்ரான், ஜூன்.21-

ஈரானில் அணுமின் நிலையத்துக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையே மூண்டுள்ள போர் இன்னும் ஓயவில்லை. இருநாடுகளும் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில், வடக்கு ஈரானில் அந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. அது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மற்றொரு நிலநடுக்கம், செம்னான் மாகாணத்தில் இருந்து 22 மைல் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இங்கு தான் விண்வெளி மையம் மற்றும் ஏவுகணை வளாகம் அமைந்துள்ளது.

மேலும், அதன் அதிர்வுகள் சோர்கே நகரைச் சுற்றிலும் உணரப்பட்டு உள்ளது. சோர்கே நகரம் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ளது. நிலநடுக்கங்களினால் எவ்வித சேதமோ, உயிரிழப்போ ஏற்பட்டதா என்பது பற்றிய எந்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.

WATCH OUR LATEST NEWS