சூறாவளியில் 11 வாகனங்களும் ஆறு வீடுகளும் சேதம்

ஜார்ஜ்டவுன், ஜூன்.29-

இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட சூறாவளியால் பினாங்கு, குளுகோர், தாமான் துன் சர்டோன் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வாகனங்களும், ஆறு வீடுகளும் பலத்த சேதமடைந்தன. ஒரு பிளாக்கின் மேற்கூரை காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, அதன் சிதைவுகள் எதிரில் உள்ள பிளாக்கின் வீடுகளையும் வாகனங்களையும் தாக்கிச் சேதப்படுத்தியதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் தங்கள் வாகனங்கள் சேதமடைந்ததை சிசிடிவி காட்சிகள் மூலம் பார்த்ததாகவும், ஒரு மணி நேரத்திற்குப் பிறகே வீட்டை விட்டு வெளியே வரத் துணிந்ததாகவும் தெரிவித்தனர்.

சூறாவளியின் கோரத் தாண்டவம் அமைதி பெற்றதும், சேதமடைந்த பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்ட பினாங்கு மாநகராட்சி மன்ற உறுப்பினர் ரொஹாய்ஸாட் ஹாமிட், இத்தகைய கடுமையானச் சூறாவளியை இந்தப் பகுதி இதுவரை சந்தித்ததில்லை என்று குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS