மைஐடென்டிடி நிகழ்வில் எஸ்.பிரகாஷ்

ஷா ஆலாம், ஜூன்.29-

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி மக்களின் நலன் கருதி, மைஐடென்டிடி எனும் நிகழ்ச்சி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஷா ஆலம், புக்கிட் ரிமாவில் நடைபெற்றது. குடியுரிமை, பிறப்புச் சான்றிதழ், தத்தெடுத்தல் நிலை, சிவப்பு அடையாள அட்டை போன்ற ஆவணப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்ச்சியை கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் பெர்துபுஹான் கெபஜிகான் கெமாஜுவான் மஷாராகாட் ஏற்பாடு செய்திருந்ததாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் தெரிவித்தார்.

தேசியப் பதிவிலாகா உட்பட பல அரசுத் துறைகளும் அரசு நிறுவனங்களும் நேரடியாகக் கலந்து கொண்டு முகப்புகளை அமைத்ததுடன், மக்களுக்குத் தேவையான விளக்கங்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இது போன்ற ஆவணப் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம், மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என பிரகாஷ் தொடக்கி வைத்து உரையாற்றுகையில், இதனைக் குறிப்பிட்டார்.

அதே சமயம், கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் தொடரும் வெள்ளப் பிரச்னையைத் தீர்க்க, வெள்ளத் தணிப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், தற்போதுள்ள அமைப்புகளின் செயல்திறனை மறுபரிசீலனை செய்யவும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS