பாதுகாப்பு உத்தரவாத மோசடி: சிஐஎம்பி முன்னாள் அதிகாரிக்கு 2 ஆண்டுச் சிறை

கோலாலம்பூர், ஜூன்.30-

பாதுகாப்பு உத்தரவாத மோசடியைப் புரிந்த குற்றத்திற்காக நாட்டின் முன்னணி வங்கியான சிஐஎம்பியின் முதலீட்டு அதிகாரி ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் 10 லட்சம் ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ருவான் அமரேஷ் ஷைவுன் பொன்னையா என்ற அந்த உயர் அதிகாரி, தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நோர்மா இஸ்மாயில் இத்தண்டனையை விதித்தார்.

இரண்டு லட்சத்து ஆயிரம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட மோசடியை அவர் புரிந்துள்ளார் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS