எரிவாயு குழாய் வெடித்து நிகழ்ந்த விபத்துக்கு என்ன காரணம்

ஷா ஆலாம், ஜூன்.30-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவப் பேரிடருக்கு குழாய்களின் அடியில் மண் நகர்ச்சியே காரணமாகும் என்று விசாரணைக் குழு அறிவித்துள்ளது.

குழாய்க்கு அடியில் உள்ள மண், வலுவிழந்து மண் அரிக்கப்பட்டதைத் தொடர்ந்து குழாயில் வெடிப்பு ஏற்பட்டு, தீ ஏற்படுவதற்கு வித்திட்டுள்ளது என்று வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார இலாகாவின் பெட்ரோல் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் ஹுஸ்டின் சே அமாட் தெரிவித்தார்.

தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்றோனாசுக்குச் சொந்தமான அந்த எரிவாயு குழாய்கள் குறித்து கடந்த மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விளைவாக இது தெரிய வந்துள்ளது என்று இன்று வெளியிட்டப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS