சிரம்பான், ஜூலை.01-
சிரம்பான், சுங்கை காடுட், தாமான் துவாங்கு ஜஃபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா, வரும் ஜுலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
நாளை ஜுலை 2 ஆம் தேதி புதன்கிழமை நடேஸ்வரர் உற்சவம், ஜுலை 3 ஆம் தேதி வியாழக்கிழமை வில்வ அர்ச்சனை, ஜுலை 4 ஆம் தேதி வெள்ளக்கிழமை பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா, ஜுலை 5 ஆம் தேதி கற்பூரத் திருவிழா மற்றும் ஜுலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சவத் திருவிழாவுடன் பஞ்சமூர்த்திகள் இரதப் புறப்பாடு நடைபெறும்.
திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ சுந்தரப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் தலைமையில் அவரின் ஆலோசனைப்படி மஹோற்சவப் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்த மஹோற்சவப் பெருவிழாவில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் அருளாசியைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் சார்பில் ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகள் கேட்டுக் கொள்கிறார்.