குவாந்தான், ஜூலை.01-
கடந்த மாதம் முற்பகுதியில் குவாந்தானில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் பகாங், அரசப் பேராளர் ஒருவருடன் தொடர்புபடுத்தப்பட்ட ஆடவர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.
மேல் நடவடிக்கைக்காக அந்த விசாரணை அறிக்கை, சட்டத்துறை அலுவலகத்திடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குற்றவியல் சட்டம் 324 ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.