சீலாட் தற்காப்புக் கலைப் பயிற்றுநர் கைது

மலாக்கா, ஜூலை.02-

தம்மிடம் சீலாட் தற்காப்புக் கலைப் பயிற்சி பெற்று வந்த 12 வயது மாணவியை மானபங்கம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சீலாட் பயிற்றுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மலாக்கா, அலோர் காஜாவில் நிகந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்ததைத் தொடர்ந்து 35 வயது மதிக்கத்தக்க அந்த சீலாட் பயிற்றுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பயிற்றுநர், பெண்கள் மற்றும் சிறார் பாலியல் சட்டத்தின் கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பயிற்சி என்ற போர்வையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அந்த மாணவியை வெளியில் அழைத்துச் சென்றதாக நம்பப்படும் அந்த சீலாட் பயிற்றுநர், இத்தகையக் காமச் சேட்டைகளைப் புரிந்ததாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS