மெல்போர்ன், ஜூலை.02-
ஆஸ்திரேலியா, மெல்போர்ன் விமான நிலையத்தில் உள்ளூர் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தில் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானப் பயணம் தாமதமானது.
இந்தச் சம்பவம் நேற்று ஜுலை முதல் தேதி செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது. விர்ஜின் நிறுவனத்திற்குச் சொந்தமான விஏ 337 பயணிகள் விமானத்தின் சரக்குகள் வைக்கப்படும் இடத்தில் ஒரு பச்சை மரப் பாம்பு காணப்பட்டது.
விமானம், மெல்போர்னிலிருந்து பிரிஸ்பேர்ன் புறப்படவிருந்த நிலையில் அந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. 60 செண்டி மீட்டர் நீளம் கொண்ட அந்த பாம்பை, விமானத்திலிருந்து அகற்றியப் பின்னரே அது பிரிஸ்பேர்னுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதனால் விமானப் பயணம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமானதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாம்பைப் பாதுகாப்பாகப் பிடிக்கத்க் தகுதி வாய்ந்த பாம்பு பிடிப்பவர் வரவழைக்கப்பட்டதாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.