பிக்காப் வாகனம் விபத்து: இருவர் உயிரிழந்தனர்

கோல கங்சார், ஜூலை.02-

வேகக் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று நம்பப்படும் பிக்காப் வாகனம் ஒன்று, எதிரே சென்று கொண்டு இருந்த லோரியின் பின்புறம் மோதியதில் அதன் ஓட்டுநரும், பயணி ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.50 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 253 ஆவது கிலோமீட்டரில் கோல கங்சார் அருகில் நிகழ்ந்தது. பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து தீயணைப்பு மீட்புப் படையினர் காலை 6.30 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்ததாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப் படை உதவி இயக்குநர் சபாரோட்இ நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

சின்னா பின்னமான அந்த பிக்காப் வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் பிரத்தியேகச் சாதனங்களைப் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS