புக்கிட் பீசி, ஜூலை.02-
லோரியின் டயர் திடீரென்று வெடித்ததில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படும் அந்த கனரக வாகனம், சாலைத் தடுப்பை மோதி, தடம் புரண்டதில் மாதுவும், அவரின் மகனும் உயிரிழந்த வேளையில் லோரியைச் செலுத்திய அந்த மாதுவின் கணவர் கடும் காயங்களுக்கு ஆளானார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் கிழக்குக் கரையோர நெடுஞ்சாலையான லெபுராயா பந்தாய் திமோர் 2 இல் 362.9 ஆவது கிலோ மீட்டரில் புக்கிட் பீசி டோல் சாவடிக்கு அருகில் நிகழ்ந்தது.
இல்லத்தரசியான 42 வயது இஸ்னைனி முகமட் மற்றும் அவரின் 5 வயது மகன் முகமட் அல் அமீன் கைருல் ஷானி ஆகியோரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது.
லோரியைச் செலுத்திய அந்த மாதுவின் 49 வயது கணவர் கைருல் ஷாமி என்பவர் கடும் காயங்களுடன் திரெங்கானு டுங்குன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.