கோலாலம்பூர், ஜூலை.02-
பிரபல அரசு தரப்பு வழக்கறிஞர் கேவின் மொராயிஸ் கொலை வழக்கில் பிரதானக் குற்றவாளி என்று வகைப்படுத்தப்பட்டுள்ள டாக்டர் ஆர். குணசேகரன் உட்பட நால்வருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டதை நீதித்துறை மற்றும் சட்டத்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் இன்று வரவேற்றுள்ளது.
அதே வேளையில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட இதர இரண்டு நபர்கள், அந்த தண்டனையிலிருந்து தப்பிய போதிலும் அவ்விருவருக்கும் கூட்டரசு நீதிமன்றம் நேற்று விதித்துள்ள தலா 35 ஆண்டு மற்றும் 40 ஆண்டுச் சிறைத் தண்டனைத் தீர்ப்பைத் தாங்கள் வரவேற்பதாக அந்தச் சங்கம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட தங்கள் சங்கத்தைச் சேர்ந்த துணை பப்ளிக் பிராசிகியூட்டர் கேவின் மொராயிஸ் மிகுந்த தயாள குணமுடைவர் என்று அந்தச் சங்கம் வர்ணித்துள்ளது.