கோலாலம்பூர், ஜூலை.02-
வரி விதிப்புப் பிரச்சினை மீதான மலேசியாவின் அணுகுமுறை மற்றும் அதன் ஈடுபாடு, அமெரிக்காவிடமிருந்து நேர்மறையான பதில் கிடைத்துள்ளது என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான மலேசியாவின் முன்னெச்சரிக்கையான ஈடுபாடு மற்றும் அணுகுமுறையானது, சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதும், இரு தரப்பினருக்குமே வெற்றி கிடைக்கும் வகையிலும் சூழ்நிலையை அறிந்து ஒன்றிணைந்து செயல்படுவதற்கான நிலை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் அணுகுமுறைக்கு அமெரிக்கா நேர்மறையான பதிலை வழங்கியுள்ளது. இரு தரப்பு வர்த்தகக் குழுக்களும் எவ்வாறு பலன் அடைவது என்பது குறித்து இச்சந்திப்பின் போது முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக அமீர் ஹம்ஸா தெரிவித்தார்.
மலேசியாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பில் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமீர் ஹம்ஸாவும், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸும் அண்மையில் அமெரிக்கா சென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.