கோலாலம்பூர், ஜூலை.02-
அரசு தரப்பு வழக்கறிஞர் காலஞ்சென்ற கேவின் மொராயிஸ் கொலை வழக்குடன் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கைத்க் தொடர்புப்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பில் லிம் கிட் சியாங் உட்பட பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கெவின் மெராய்ஸ் கொலை வழக்கிற்கு கூட்டரசு நீதிமன்றம் நேற்று முழுமையாகத் தீர்வு கண்டுள்ளது. இந்த கொலை வழக்கில் எந்த இடத்திலும், நஜீப்பிற்கு தொடர்பு உள்ளது என்று மேற்கோள் காட்டப்படாத நிலையில், இதில் முன்னாள் பிரதமருக்குத் தொடர்பு இருப்பது போல் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் லிம் கிட் சியாங் பேசியிருந்தார் என்று நஜீப் தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதே வேளையில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும் அவ்வாறே உவமைக் காட்டி பேசியிருந்ததாக நஜீப்பின் வலைத்தளத்தை வழிநடத்தி வரும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்டர்கள் நஜீப்பிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.