மயாமி, ஜூலை.02-
கிளப் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியின் சிறந்த 16 அணிகள் சந்திக்கும் சுற்றில், ஸ்பெயின் ஜாம்பவானான ரியால் மாட்ரிட் 1க்கு 0 என யுவேந்தஸைத் தோற்கடித்தது. தட்ப வெப்ப நிலை காரணமாக ஆட்டக்காரர்கள் கடும் சவாலுக்கு மத்தியில் அவ்வாட்டத்தில் களமிறங்கினர்.
வானிலை மோசமாக இருந்ததன் காரணமாக யுவேந்தஸின் முதல் நிலை விளையாட்டாளர்கள் சோர்வடைந்ததால், அவர்களுக்கு மாற்றான ஆட்டக்காரர்கள் களமிறக்கப்பட்டனர். இந்நிலையில் அவ்வணிக்கு ஈடு கொடுத்து ஆடிய ரியால் மாட்ரிட், சுறுசுறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு கோலுடன் காலிறுதிக்குத் தகுதி பெற்றது. அந்த வெற்றி கோலை கொன்சாலோ கார்சியா அடித்தார்.