ஷா ஆலாம், ஜூலை.02-
ஆபாசப் படங்களை விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் கணவன் மனைவியைப் போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவு 8 மணியளவில் ஷா ஆலாம், செக்ஷன் 27இல் உள்ள ஒரு ஹோட்டலில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு பெண்களைப் போலீசார் கைது செய்தனர். அந்த இரு பெண்களில் ஒருவரைத் தனது சொந்தக் கணவரே விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி இசா தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பெண்ணும், அவரின் கணவரும் ஆபாசப் படங்களை விற்பனை செய்து வந்த வேளையில் அந்த நபர், தனது மனைவியை ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபடுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.