கெந்திங் ஹைலட்ஸ், ஜூலை.02-
கெந்திங் ஹைலட்ஸ், தாமான் செண்டாவானில் பேருந்து ஒன்று, தூண் ஒன்றை மோதித் தள்ளி, கூரை இடிந்து டாக்சி மீது விழுந்த விபத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சைஹாம் முகமட் காஹார் தெரிவித்தார்.
இதில் டாக்சி கடுமையாகச் சேதமுற்ற போதிலும் அதில் பயணிகள் யாரும் இல்லை. எனினும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.