லங்காவி, ஜூலை.02-
லங்காவி, பூலாவ் லிந்தாங் கடற்பகுதியில் லைசென்ஸின்றி போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட உல்லாசக் கப்பல் ஒன்று தடுக்கப்பட்டது. 39 பயணிகளுடன் அந்த சொகுசுக் கப்பல் பயணத்தில் இருந்த போது கெடா மாநில கடல்சார் அமலாக்க அதிகாரிகள், அந்த உல்லாசக் கப்பலைத்க் தடுத்துச் சோதனையிட்ட போது, அந்த கப்பலின் லைசென்ஸ் காலாவதியாகி விட்டது என்பது தெரிய வந்துள்ளது.
நேற்று மாலை 6 மணியளவில் லங்காவி தீவிலிருந்து 0.2 கடல் மைல் தொலைவில் அந்த உல்லாசக் கப்பல் இருந்த போது தடுக்கப்பட்டதாக கெடா மாநில கடல் சார் அமலாக்க ஏஜென்சியின் கெடா மாநில இயக்குநர் முதலாவது லக்சாமானா ரொம்லி முஸ்தாஃபா தெரிவித்தார்.
அந்தக் கப்பலில் 3 உள்ளூர் பிரஜைகள் உட்பட 39 பயணிகள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.