பழங்கால வெடிகுண்டு கண்டெடுப்பு

குவாந்தான், ஜூலை.02-

குவாந்தான், புக்கிட் கோ, ஆர்டிபி நிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புக் கட்டுமானத் தளத்தில் பழங்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

250 கிலோ எடை கொண்ட ஏரியல் ரகத்தைச் சேர்ந்த அந்த வெடிகுண்டு மண்ணில் புதையுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அடில் மாட் டாவுட் தெரிவித்தார்.

அந்த வெடிகுண்டு, இன்று காலை 10 மணியளவில் குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைமையகம் மற்றும் பகாங் போலீஸ் தலைமையகம் ஒன்றிணைந்து வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS