கோலாலம்பூர், ஜூலை.02-
கடந்த 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள உயர்க்கல்விக் கூடங்களில் 222 மாணவர்களுக்கு எச்ஐவி நோய் கண்டு இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்துள்ளார்.
அந்த நோய் கண்ட பல்லைக்கழக மாணவர்களில் பெரும்பகுதியினர் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஆவர்.
பாதுகாப்பற்ற செக்ஸ் நடவடிக்கைகள், போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கம், போதைப்பொருள் ஊசிகளை மாற்றிக் கொள்வது முதலிய காரணங்களினால் அவர்களுக்கு எச்ஐவி நோய் இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் விளக்கினார்.
அதே வேளையில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை எச்ஐவி நோய் கண்ட உயர்க்கல்விக் கூட மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 1,091 பேராகும் என்று நேற்று நாடாளுமன்ற மேலவையில் கேள்வி நேரத்தின் போது டத்தோ லுகானிஸ்மான் இதனைத் தெரிவித்தார்.